மனித உரிமை பேரவைக்கு வரும் ஆட்கடத்தல் விவகாரம

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மூத்த அரசியல்வாதியொருவர் கருத்து வெளியிடும் போதே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் அடுத்த கூட்டத்தொடரில் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையில் ஆட்கடத்தல்களும், ஆட்கள் காணாமற் போகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக அண்மையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிக்கல ஆகியோர் கடத்தப்பட்ட விவகாரம் இலங்கையை மீண்டும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முன்பாக இழுத்துச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply