தேசிய இனப்பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது : சுரேஸ் பிரேமசந்திரன்
தேசிய இனப்பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதில் அரசாங்கம் மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக் குறித்து உள்நாட்டு அல்லது சர்வதேச ரீதியில் கேள்வி எழுப்பப்படும் சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் கருத்துக்களை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அமைக்கப்படாத பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை, பிரச்சினைக்கு தீர்வு காணும் பிரதான பொறிமுறைமையாக அரசாங்கம் குறிப்பிட்டு வருவது அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply