லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஆதரவு

ஈரானின் கச்சா எண்ணெய்யினை சுத்திகரிப்பதற்கு ஏற்ற இலங்கையின் ஒரே நிலையம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. உடனடியாக சிறந்த முறையில் எண்ணெய் சுத்திகரிப்பினை செய்வதற்கு உகந்த நிலையமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமே விளங்குவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளுக்கு தமது நிறுவனம் ஆதரவு வழங்கும் என அந்நிறுவத்தின் நிர்வாக பணிப்பாளர் சுரேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி தொழிநுட்ப ரீதியாக உதவிகளையும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் வழங்கத் தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply