நாடு திரும்பும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
நாடு திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2012 முதல் காலாண்டில் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 408 பேர் யுஎன்எச்சிஆர் இன் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர். கடந்த ஆண்டு முதல் கொழும்பு – தூத்துக்குடி படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டமையும் இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டில் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருந்த அவேளை அவ் ஆண்டின் இறுதிப் பகுதியில் சடுதியாக குறைவடைந்தது. பெரும்பாளான இலங்கை அகதிகள் தமிழக முகாம்களிலேயே இருக்கின்றனர்.
இதனை விட மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவு இலங்கை அகதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அறிக்கை குறிப்பிடுகிறது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை அகதிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை திருகோணமலைஇ மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் இருந்து திரும்புகின்றனர் எினும் இவர்களது தொகை ஏனைய மாவட்டங்களை விட குறைந்தளவிலேயே காணப்படுகிறது.
இறுதியாக 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாத இந்திய அரசின் கணிப்பீட்டின் படி தமிழ்நாட்டிலுள்ள 112 முகாமில் 68,049 இலங்கை அகதிகள் உள்ளனர்.
இத்துடன் அகதி முகாம்களை தவிர்த்து இந்தியாவில் 32,467 இலங்கையர்கள் வாழ்கின்றனர்.
இலங்கையர்கள் 65 நாடுகளில் 141,000 இற்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாக யுஎன்எச்சிஆர் அறிக்கை தெரிவிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply