இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 20 பொதுமக்கள் பலி

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. இதை நிறுத்த பக்கத்து நாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் காசா பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 20 பேர் இறந்துவிட்டனர்.

காசா ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு காவலர் உள்பட இருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியே இந்த தாக்குதல் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. சண்டை நிறுத்தம் கொண்டுவரவேண்டி அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் இஸ்ரேல் வந்துள்ளார்.

எகிப்தும், பாலஸ்தீனமும் சண்டை நிறுத்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்று முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply