ஆஸியில் இருந்து மேலும் 100 பேர் இன்று நாடு கடத்தல்
படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்ற மேலும் 100 இலங்கை அகதிகள் இன்று (21) நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. கடந்த இரு மாதங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 9வது தொகுதி அகதிகள் இவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திருப்பி அனுப்பப்படும் 100 இலங்கை அகதிகளுடன் ஒகஸ்ட் 13ம் திகதிக்குப் பின் இதுவரை 426 இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இங்கே மிகத் தெளிவான செய்தி ஒன்று உள்ளது. கடத்தல்காரர்களுக்கு மக்கள் பணம், தங்கம் என்பவற்றை கொடுத்து உயிரை பணயம் வைத்து செல்கின்றனர். கடத்தல்காரர்கள் பொய் கூறுகின்றனர். விசா இல்லை, சிறப்பு சிகிச்சை எதுவும் இல்லை” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply