நாட்டின் பல பாகங்களிலும் ஏற்படும் நில அதிர்வுக்கள் தொடர்பில் ஆய்வு

நில அதிர்வை ஒத்த அதிர்வுகளை இன்று காலை உணரக் கூடியதாக இருந்ததாக, அம்பாறை, கல்கந்தை, தேவாலஹிந்த மற்றும் வடிநாகல போன்ற பகுதிகளின் மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வு மற்றும் சப்தங்கள் என்பன உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24ம் திகதி இந்த பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் ஒன்று இடம்பெற்றமை, பல்லேகலையில் உள்ள நில அதிர்வு ஆய்வு மையத்தில் பதிவாகியது.

இந்த நிலையில் இன்றைய நிலநடுக்கம் குறித்து எமது செய்திப்பிரிவு புவிசரிதவியல் மற்றும் சுரங்க தொழில் திணைக்களத்தின் தலைவர் என்.பீ. விஜயாநந்தவை தொடர்பு கொண்டு கேட்டது.

இந்த அதிர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, எதிர்வரும் சில தினங்களில் நில அதிர்வுகளை ஆய்வு செய்யும் கருவிகளை பொறுத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply