சீரற்ற காலநிலை காரணமாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. வட மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளினால் இதுவரை 39 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் ஏழு பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.
நான்காயிரத்து 176 வீடுகள் முழுமையாகவும் 21 ஆயிரத்து 621 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக மன்னார், புத்தளம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலேயே சீரற்ற காலநிலையால் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வடபகுதியில் பெரும்பாலான குளங்கள் பெருக்கெடுத்ததன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை வௌ்ள நிலைமைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
அனர்த்த நிலைமை குறித்த அந்தந்த பிரதேச மக்களுக்கு பிதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply