நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் மறுமலர்ச்சிக்காகவே அபிவிருத்தி – ஜனாதிபதி மகிந்த

அரசு என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்திகளையும் எமது பரம்பரைக்கு சேர்க்கும் சொத்தாக சிலர் கருத்து வெளியிடுகின்றனர். அது தவறாகும். நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் மறுமலர்ச்சிக்காகவே நாம் இவ்வளவு தூரம் அபிவிருத்திகளையும் தியாகத்தை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வத்துகாமத்தில் வைத்துத்து தெரிவித்தார். பாத்ததும்பறை பிரதேச சபைக்கான 250 இலட்ச ருபா பெறுமதியுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

இன்றைய இளைய தலைமுறையினர் முன்னேற்றப் பாதையில் செல்ல இது மட்டும் போதாது. கல்வியிலும் முன்னேற வேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றால் போதாது.

ஒழுக்கமுள்ள கல்வி தேவையாகும். ஆனால் மும்மொழியும் தெரியாத பட்சத்தில் நாட்டின் தேசிய ஒற்றுமை சீர்குலைய முடியும்.

எனவே ஒழுக்கமுள்ள கல்வி போன்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ளும் வகையில் தாம்
புதிய செயற்பாடுகளைத் திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

இவ்வைபவத்தில் பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல்காதர் பாராளுமன்ற அங்கத்தவர் ரொஹான் ரத்வத்தை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply