இலங்கையர் பாதுகாப்பு தொடர்பில் இந்திய தூதுவர்களுக்கு ஆலோசனை

தமிழ் நாட்டில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில், இந்திய அரசுக்கு கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளோமென அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இந்தியாவில் இரு பிக்குமார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உயர் ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையரின் பாதுகாப்பு மற்றும் விடயங்கள் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி வருகிறோம் என்றார். 2012.02.01 ஆம் திகதி குவைத்தில் வைத்து பாடகி நந்தா மாலனிக்கு ஏற்பட்ட அசெளகரியம் குறித்து தயாசிரி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மேற்படி சம்பவம் குறித்து தூதரகத்தினூடாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் நந்தா மாலனி எம்.பிக்கு ஏற்பட்ட அசெளகரியம் தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.

அவருடன் சென்ற இசைக் குழுவின் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதை அனுமதிக்க முடியாது எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாது தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply