இலங்கை மீதான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவது உறுதி – சிதம்பரம்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வேண்டிய திருத்தம் கொண்டுவருவது மற்றும் இந்திய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் மத்திய அரசு தெளிவாக, உறுதியாக இருப்பதாக அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ப.சிதம்பரம் இவ்வாறு கூறினார்.  மனித உரிமை ஆணையகத்தில் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் எவ்வாறான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஜெனிவா தூதுவருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார்.

தீர்மானத்தில் எந்த திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று நேற்று மாலை முடிவு செய்யப்பட்டதாகவும் டெல்லி வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிக்கு உரிய வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜெனிவா சென்று அவர் அந்த திருத்தங்களை முன்மொழிவார் எனவும் சிதம்பரம் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை தொடர்பில் பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பாராளுமன்ற விவகார அமைச்சர் கமல்நாத் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக சிதம்பரம் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply