அமெரிக்க தீர்மானத்தை இலங்கை ஏற்றுக் கொள்ளாது – பீரிஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நாளை அல்லது நாளை மறுதினம் ஜெனிவா மனித உரிமை கவுன்ஸிலில் உத்தியோகபூர்வமாக விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு பின் வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.  

அமெரிக்க பிரேரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென இலங்கை நாளைய தினம் ஜெனிவாவில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரேரணையின் மூலம் இலங்கைக்கு நன்மை ஏற்படாதெனவும் தீயையே ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply