நவநீதம்பிள்ளையின் அறிக்கை அதிகார வரம்பை மீறி விட்டது
ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பை மீறி இலங்கை தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று (20) உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
´நவநீதம்பிள்ளை தாரித்துள்ள அறிக்கையில் இடைக்கிடையே ஐநா நிபுணர் குழு அறிக்கையில் உள்ள விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளவற்றை நீக்குமாறு நாம் நவிபிள்ளையிடம் கோரினோம். அதற்கு காரணம் ஐநா நிபுணர் குழு என்பது பான் கீ மூனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவாகும். அது ஐநா அமைப்பினாலோ சர்வதேச நாடுகளினாலோ அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல. அதற்கு சட்டபூர்வ அதிகாரங்களும் கிடையாது.
இலங்கைக்கு வருமாறு நவிபிள்ளைக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை. எனினும் தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு அவர் செல்கிறார். இது விசனத்தை ஏற்படுத்துகிறது.´
இவ்வாறு மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply