மனோ கணேசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொலை பேசியூடாகத் தனது வாழ்த்துக்களை தெரி வித்திருந்தார். இது ஜனாதிபதியின் பெருந்தன்மையான குணமாகும் என ஜனாதிபதியின் இந்து மத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.மனோகணேசன் பல்வேறு விடயங்களில் அரசுடன் முரண்பட்டு அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சித்து வருவது தெரிந்ததே.

அவ்வாறிருந்தும் ஜனாதிபதி தனது மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொண்டார். ஜனாதிபதியின் இந்த பண்பு மற்றவர்களுக்கும் வரவேண்டும். அரசு செய்யும் நல்ல நடவடிக்கைகளை கூட வரவேற்க மனமில்லாத எதிரணியினரையே இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. நல்லதை வரவேற்க கூடிய மனப்பாங்குள்ளவர்கள் எதிரணி அரசியல் செய்பவர்கள் முன் வரவேண்டும். அதுமட்டுமல்ல ஜனாதிபதி அவர்கள் வடக்கு மாகாண சபை அரசின் ஒத்துழைப்புடன் மக்களின் அபிவிருத்திக்கு உதவுவதில் பின் நிற்க போவதில்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். இது நிச்சயம் வளர்ந்துவரும் வடக்கின் வசந்தம் மக்களுக்கு செழுமையான வாழ்வைத்தரும் எனவும் பிரம்மஸ்ரீ பாபுசர்மா மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply