பாப்பரசர் இந்த வருடம் இலங்கை வரமாட்டார்
பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என வத்திக்கான் ஊடகப் பேச்சாளர் பெற்றிக் லொம்பாட் தெரிவித்துள்ளார். பாப்பரசர் இந்த ஆண்டில் ஜோர்தான் மற்றும் தென் கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றிக் லொம்பாட் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது குறிப்பிட்டார்.இந்நிலையில் அடுத்த வருடம் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பின்பேரில் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பாப்பரசருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply