டமாஸ்கஸ் அருகே சிரியா நாட்டின் விமானப்படை தளபதி படுகொலை

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சிரியாவின் விமானப்படைகள் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி போராளிகளின் முகாம்களை அழித்து வருகின்றன. விமானப்படை தளங்களின் மீது போராளிகளும் அதிரடியாக தாக்குதல் நடத்தி அரசுப் படைகளை நிலைகுலைய செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ம்லெய்ஹா பகுதியில் அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு பதிலடியாக போராளிகள் அப்பகுதியில் உள்ள விமானப்படை தளத்தின் மீது நடத்திய எதிர் தாக்குதலில் சிரியா விமானப்படையின் தலைமை தளபதி லெப்டியூணென்ட் ஜெனெரல் ஹுசெய்ன் இஷ்ஹாக் வீர மரணம் அடைந்ததாகவும் சிரியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply