ஐ.நா.வின் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை ஒருபோதும் இடமளிக்காது : அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 

இலங்கைக்கு எதிராக ஒருதலை பட்சமாகவும் அநீதியானமுறையிலும் ஐ. நா. ஊடாக நிறைவேற்றப்படும் எந்த தீர்மானங்களையும் அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கமாட்டாதென ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அடிப்படையற்ற குரோதமான முறையில் ஐ. நா. வால் இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. சரியான தரவுகள் இதில் பரிசீலிக்கப் படவில்லை. பல்வேறு நாடுகளின் வாக்குப் பலத்துடன் விவகாரங்களை விளக்க எத்தகைய தர்க்கங்கள் கொண்டுவரப்பட் டாலும் அது ஒரு தலைப்பட்சமான பிரேரணையாகும். இது அடிப்படையற்றது குரோதமானது.

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த நாட்டை வழிநடத்தும் நாட்டின் தலைவருக்கும் மக்களின் சார்பில் தீர்மானங்களை எடுக்கும் கடமைப்பொறுப்பு உள்ளது.

நாட்டின் நலனுக்கு குரோதம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையை எடுக்கவும் எவருக்கும் இடம் இல்லை,

உலகமே அதிசயிக்கும் வகையில் இந்த அரசு பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலகில் மிகவும் குரோதான பயங்கரவாத அமைப்பை இலங்கை அரசு ஒழித்தது.

இத்தகைய அடிப்படையில் தடைகள் வருவது இயற்கையாகும். இப்படி தடைகள் வந்தாலும் நாம் அவற்றை எல்லாம் எப்போதும் தைரியத்துடன் வெற்றி கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply