கிரீமியாவிற்கு குறைந்த செலவில் விமான சேவையை வழங்குகிறது ரஷ்யா

உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுடன் பொருளாதார உறவை ஏற்படுத்திக்கொண்டதால் அந்நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது. அவரது ஆட்சிக்கெதிராக எதிர்ப்பாளர்கள் வீதிகளில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யானுகோவிச் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் உக்ரைன் எதிர்ப்பாளர்களால் அந்நாடு கைப்பற்றப்பட்டது. ஆனால் அந்நாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் ரஷ்ய மக்கள் அதிகமாக வசிப்பதாக கூறி ரஷ்யா தனது படைகளை கிரீமியா பகுதிக்கு அனுப்பியது. பின்னர் கிரீமியாவில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷியாவுடன் கிரீமியாவை முறைப்படி இணைக்க அங்குள்ள மக்கள் வாக்குகள் மூலம் ஒப்புதல் அளித்தனர்.

தற்போது ரஷ்யா கிரீமியாவிற்கு குறைந்த செலவில் விமான சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. டோப்ரொலெட் என்ற அந்த விமானம் தினமும் மாஸ்கோவிலிருந்து கிரீமியாவில் உள்ள சிம்பெர்பூல் நகருக்கு நான்கு முறை செல்லும். அதன்படி முதல் விமான சேவையை அந்நாட்டு பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் துவக்கிவைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply