நாட்டில் ஆட்சி மாற்றம் அவசியம் ஆனாலும் ஐ.தே.க. வுக்கு ஆதரவில்லை : ரில்வின் சில்வா

நாட்டின் ஆட்சி மாற்றம் அவ­சி­ய­மா­னதே. எனினும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்க தயா­ரில்லை என தெரி­வித்த ஜே.வி.பி. யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா 1987 காலப்­ப­கு­தியில் ஜே.வி.பி. யினால் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு மன்­னிப்புக் கோரு­கின்றோம் எனவும் தெரி­வித்தார். பொதுத் தேர்­தலில் ஜே.வி.பி. யின் நிலைப்­பாடு மற்றும் கட்­சியின் தலைவர் சர்­வ­தேச ஊடகம் ஒன்றின் முன்­னி­லையில் மன்­னிப்புக் கோரி­யமை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தற்­போது தேவைப்­ப­டு­கின்­றது. மக்­களும் அதனை விரும்­பு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி தேர்­த­லொன்று இடம்­பெறும் சந்­தர்ப்­பத்தில் எமது நிலைமை தொடர்பில் சிந்­தித்தே முடி­வெ­டுப்போம். அர­சாங்கம் மற்றும் பிர­தான எதிர்க்­கட்சி ஆகிய இரு சாராரில் எவ­ரேனும் ஒருவர் பக்கம் ஜே.வி.பி. நிற்­க­வேண்டும் என எதிர்­பார்க்­கின்­றனர்.

எனினும் நாம் ஒரு போதும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினை ஆத­ரித்து செயற்­பட மாட்டோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் நேர்த்­தி­யா­ன­தொரு வேலைத்­திட்டம் இல்­லாத சந்­தர்ப்­பத்தில் எமது வாக்­கு­களை அவர்­க­ளுக்கு வழங்­கு­வ­தனால் மக்­களை ஏமாற்ற நேரி­டுமே தவிர ஆட்சி மாற்றம் ஏற்­படப் போவ­தில்லை. அதற்­காக அர­சாங்­கத்தை ஆத­ரிப்­ப­தாக நினைக்­க­வில்லை. எனினும் ஆட்சி மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை எதிர்­வரும் காலங்­களில் ஜே.வி.பி. மேற்­கொள்ளும்.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க சர்­வ­தேச ஊட­க­மொன்றில் வெளி­யிட்ட கருத்து தற்­போது சில ஊட­கங்­களில் வின­வப்­பட்டு வரு­கின்­றது. உண்­மை­யி­லேயே 1987 – ௧989 காலப் பகு­தியில் ஜே.வி.பி. கிளர்ச்சி கால கட்­டத்தில் எம்மால் 6 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை ஏற்றுக் கொள்ள முடி­யா­தவை. எம்மால் சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றமை உண்­மையே அதற்கு மன்­னிப்புக் கோரு­கின்றோம்.

இத­னையே தலை­வரும் குறிப்­பிட்டார். எனினும் 6ஆயிரம் பேர­ளவில் கொல்­லப்­பட்­டது முழுப் பொய். அதே போல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் 60 ஆயிரம் பேர் கொல்­லப்­பட்­டதை மறந்து விட்டனர். அவர்கள் செய்த கொலைகளையும் ஜே.வி.பி. மீது சுமத்தி எம்மை குற்றவாளியாக்கி விட்டனர். அவை எது தொடர்பிலும் பொறுப்பு கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply