ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்: வீடியோவை வெளியிட்டது ஐ.எஸ்

ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவர் தவிர ஜப்பானின் கென்ஜி கோடோ என்பவரையும், ஜோர்டானை சேர்ந்த விமானி அல்–கஸாக்பே என்பவரையும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.இவர்களை உயிருடன் விடுவிக்க வேண்டுமானால் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் கெடுவிதித்து இருந்தனர்.

இதை தொடர்ந்து ஐப்பான் மற்றும் ஜோர்டான் அரசுகள் ரிஷாவி விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்து வந்தன. இந்நிலையில் தீவிரவாதிகளின் கெடு முடிந்து இரண்டு நாட்கள் ஆனதால் கென்ஜி கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பலமுறை வீடியோவில் தோன்றி மிரட்டல் விடுத்த ஜிகாதி ஜானால், கென்ஜி கொல்லப்பட்டதற்கான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். பாலைவன பகுதியில் கென்ஜியின் சடலம் கிடப்பதும் வீடியோவில் தெரிகிறது.

அந்த வீடியோவில், இனியாவது நாங்கள் யார் என்பதை நீங்களும், உங்கள் கூட்டாளிகளும் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஜப்பானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஜான் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply