ஐ.நா அறிக்கை மார்ச் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் : த: தே: கூ
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் ஐ.நா அறிக்கை மார்ச் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தலைவரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா அறிக்கையினை வெளியிட கோரி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.ஐ.நா அறிக்கையினை உரிய மார்ச் மாதம் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி கடிதம் ஒன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 01 ஆம் திகதி செயற்குழு கூடுகின்றது. அந்த செயற்குழுகூட்டத்தில் ஐ.நா அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தனினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு எழுதப்பட்டுள்ளதே தவிர பிற்போடப்படுவது குறித்து அல்ல.
உள்ளக விசாரணையில் நம்பிக்கை கொள்ள முடியாது. ஆந்த விசாரணை காலத்தினை நீடிப்பதாக இருக்கும். எமக்கு கிடைக்கும் தகவலின் பிரகாரம் தற்போது தயாரிக்கப்படும் ஐ.நாவின் அறிக்கை மிகவும் கடினமானதாக இருக்கின்றது என்பது எமக்கு தெரியும்.
இந்த பிரேரணையினை அமெரிக்கா தான் கொண்டு வந்தது. ஆந்த பிரேரணையில் தமிழ் மக்களின் உணர்வுகள் மிகவும் உன்னதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆவற்றினைக் கொண்டு மிக விரைவாக இந்த பிரேரணையினை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐ.நாவிடம் வலியுறுத்தி கேட்டிருக்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply