சர்வதேசத்தை திருப்திப்படுத்தவே இலங்கையில் விசாரணை : நிமல் சிறிபால டி சில்வா குற்றச்சாட்டு

இலங்­கையை சர்­வ­தேசக் கூண்டில் நிறுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சியை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. யுத்­த­க் குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்­தவே இலங்­கையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார்.ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் கொள்­கை­யா­னது சர்­வ­தேச வேலைத்­திட்டம் மட்­டுமே. மக்­க­ளையும் நாட்­டையும் அது பலப்­ப­டுத்­தாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­ம­ளவில் இலங்­கையில் உள்­ளக விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என அர­சாங்கம் தெரி­வித்­தி­ருக்கும் நிலையில் அது தொடர்பில் எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாட்­டினை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் கொள்கை சர்­வ­தே­சத்தை திருப்­பதிப் படுத்­து­வ­தாக மட்­டுமே அமைந்­துள்­ளது. சர்­வ­தேச தலை­யீட்டை ஏற்­ப­டுத்தி அத­னூ­டாக அர­சியல் செய்­யவே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது. ஆனால் அதற்கு நாம் ஒரு­போதும் இணங்கப் போவ­தில்லை. எமது அர­சியல் கொள்­கையும் செயற்­பா­டு­களும் நாட்­டையும் மக்­க­ளையும் பிர­தானப் படுத்­தி­யது. இலங்­கையில் இடம்­பெற்ற இறுதிப் போரின் பொது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் யுத்த குற்­றச்­சாட்­டு­களை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். நாட்டில் மூவின மக்­க­ளையும் பாதித்த தீவிர வாதத்தை நியா­யப்­ப­டுத்தி புலி­க­ளுக்­கான போராட்­டத்தை நியா­யப்­ப­டுத்த இவர்கள் முயட்­சி­கின்­றனர். அதை நாமும் ஏற்­றுக்­கொண்டால் மூவின மக்­களின் நிம்­மதி மீண்டும் பரி­போய்­வேடும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி அமைந்­த­வுடன் இன்று வடக்கில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு மீண்டும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­பு­களின் கரம் மீண்டும் ஓங்­கி­யுள்­ளது. தடை­செய்­யப்­பட்ட பல அமைப்­புகள் மீண்டும் உயிர்­பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் இவர்­களை தொடர்ந்தும் ஆட்­சியில் வைத்­தி­ருந்தால் நாடு மோச­மான விளை­வு­களை சந்­த­திக்கும். அதேபோல் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்ற விசா­ர­ணை­களை சர்­வ­தேசம் மேற்­கொன்­டாலும் அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் மேற்­கொன்­டாலும் இறுதி முடிவு ஒன்­றா­கவே அமையும். ஆகவே இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் உள்­ளக விசா­ரணை இலங்­கையை எந்த வகை­யிலும் பாத்­து­காக்­காது. எனவே நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் பாதிக்கும் எந்­த­வொரு விசா­ர­ணையும் இலங்­கையில் நடை­பெறக் கூடாது.

மேலும் வடக்கில் பொது மக்­களை பாதிக்கும் எந்த நட­வ­டிக்­கையும் எமது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மனிதாபிமான நடவடிக்கையே வடக்கில் இடம்பெற்றது. நாம் செய்த நடவடிக்கையால் இன்னும் பல காலத்துக்கு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதில் யாருடைய தலையீடுகளுக்கும் நாம் இடம் கொடுக்கத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply