சஜின் வாஸ் குணவர்தன நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டார். நேற்று மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர், செய்யப்பட்ட அவர், 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 20 வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக சஜின்வாஸ் குணவர்தன நேற்று காலை சி. ஐ. டிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரிடம் நேற்று பிற்பகல் வரை வாக்குமூலம் பதியப் பட்டதாக தெரிவித்த பொலிஸார் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் இதற்கு முன் இலஞ்ச ஊழல் திணைக்களமும் வாக்குமூலம் பெற்றிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply