மைத்திரி – வாசு இந்த வாரம் சந்திக்கவுள்ளனர்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக மஹிந்த அணி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113க்கு மேல் ஆசனங்களை வெற்றி பெற்று மஹிந்த ராஜபக் ஷ இந் நாட்டின் பிரதமராவது நிச்சயமாகுமென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டத்திற்கு அமைய சந்திரிக்கா, ரணில் உட்பட அனைத்துவிதமான சதிகாரர்கள் இணைந்து ஏற்படுத்திய பொறி தகர்க்கப்பட்டுள்ளது.
இன்று மைத்திரியும் மஹிந்தவும் ஓரணியில் இணைந்துள்ளனர்.
நுகேகொடையில் ஆரம்பமான மக்கள் போராட்டம் இன்று வெற்றி கண்டுள்ளது.
ஜனநாயக ரீதியிலான மக்கள் பலத்தினால் ஏகாதிபத்திய வாதிகளின் சதித்திட்டங்களை தோல்வியடையச் செய்யலாம் என்பது இன்று உண்மைாயக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பும், சமூக நியாயத்துக்குமான மக்கள் சார்பு கொள்ளை. மைத்திரி மஹிந்த ஒன்றிணைவின் மூலம் ஆகஸ்ட் 17ஆம் திகதி மாபெரும் வெற்றியை பெறுவது நிச்சயமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை சுற்றியுள்ள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் ஒற்றுமைப்படுத்த மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
குடும்ப ஆட்சியை நாமும் எதிர்க்கின்றோம். இன்று மைத்திரியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களின் முகத்திரை கிழிந்துள்ளது.
எஸ்.பி. நாவின்ன ஐ.தே.கட்சியுடன் இணைந்து விட்டார். எதிர்காலத்தில் மேலும் பலர் ஐ.தே.கட்சியுடன் இணைவார்கள்.
மைத்திரியுடன் இருந்தாலும் இவர்களின் ஆதரவு ஐ.தே.கட்சியிடமே இருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு 107 ஆசனங்கள் கிடைக்கும். இதனோடு இடதுசாரிகளும் ஒன்றிணையும் போது 113க்கு மேல் ஆசனங்கள் கிடைக்கும்.
ஐக்கிய மக்கள் சுதரந்தர முன்னணியின் வெற்றிலைச் சின்னம் வெற்றி பெற்று
மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டின் பிரதமராவது நிச்சயமாகும்.
எதிர்வரும் நாட்களில் (இந்த வாரம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எமது அணி சந்தித்து பேச்சுவாரத்தைகளை நடாத்தவுள்ளதாகவும் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply