ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா  உள்பட 4 பேரை விடுத்து கர்நாடக  உயர்நீதிமன்றம் கடந்த மே 11ம் தேதி தீர்ப்பளித்தது.இந்நிலையில் இந்த தீர்ப்பை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பாக மேல்முறையீடு இன்று  செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் வழக்கறிஞர் வி.ஜி பிரகாசம் மேல்முறையீட்டு மனுவை அளித்தார்.முன்னதாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply