இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்: கைது செய்தது இந்திய கடலோரக் காவல் படை
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு படகில் இருந்த 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடலோர காவல் படையினரிடம் சிக்கிய அந்த படகில், ஈரான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இருந்தனர். அவர்களிடம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பணம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விழிஞம் துறைமுகத்தில் வைத்து அவர்களிடம், கேரள காவல்துறையினரும், இந்திய ராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர்கள் இந்திய கடல் எல்லையில் நுழைந்தனர் என்பது குறித்தும், அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply