தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்
நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
ஆந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனவரி பின்னரான மாற்றத்தினை எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள் என அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தான் பதிலளிக்கையில், மாற்றம் ஏற்பட்டமைந ல்ல விடயம் என்று கூறியதாகவும், பின்னர் நடைபெற்று முடிந்த தேர்தலின்பின்னர் எவ்வாறான நிலமை காணப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பியதாகவும் வடமாகாண முதலமைச்சர் கூறினார்.
அதேவேளை, தேர்தல் நல்லமுறையில் நடைபெற்றிருந்தாலும், வருங்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றி எமக்கு தெரியாது. ஓகஸ்ட்மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ் மக்களை பொறுத்தவரையில் நன்மையாக அமையவில்லை. நூட்டினை முழுமையாக பார்த்தால் ஜனநாயக ரீதியில் நன்மையை தந்துள்ளது. தனிப்பட்ட வகையில், தமிழ் மக்களின் நலனுக்காக பார்த்தால் நன்மை தந்தாக தெரியவில்லை.
யாழ்.மாவட்டத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. இராணுவம் யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேநேரம் 64 ஆயிரம் ஏக்கர் காணியில் 1000 ஏக்கரை மட்டும் மக்களுக்கு விடுத்துள்ளனர். ஆந்த காணிகளில் மக்கள் குடியமர முடியாது. எனவே, எவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்பார்க்க முடியுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்காண அரசின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசின் உள்ளீடுகள் அதிகமாக காணப்படுகின்ற அதேவேளை, இராணுவத்தின் செயற்பாடுகளை வெளியில் குறைத்துக்கொண்டாலும்,சில செயற்பாடுகளை மறைமுகமாக செய்கின்றார்கள்.
முன்னர் எடுத்த காணிகளை விட்டும், மீண்டும் தமக்கான முகாம்களை அமைப்பதற்கு காணிகளை கேட்டு எம்மிடம் வருகின்றார்கள். அந்த காணிகளை கொடுக்க மறுத்துவிட்டால், காணி ஆணையாளரின் அனுமதியினை பெற்றுகொண்டு அந்த காணிகளை பெற்றுக்கொள்கின்றார்கள். இவை அனைத்துச் செயற்பாடுகளும் எமக்கு நன்மை பயக்குவனவாக தெரியவில்லை. அரசாங்கம் யாராக இருந்தாலும், தமிழ் சிங்களம் என்ற இனப்பாகுபாடு பிரதிபலிக்கின்றதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். ஊள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களாக என செனட் உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆம், உள்ளகவிசாரணையினை நாங்கள் எதிர்க்கின்றோம். அனைத்து தமிழ் மக்களும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதாக செனட் உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.
ஆரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், சர்வதேசத்துடன் இணைந்த உள்ளக பொறிமுறையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
சுர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டுமென அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்களிடம் வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply