அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி நியூயார்க்–லண்டன் நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம்

அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி நியூயார்க், லண்டன் உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது வளர்ந்து வரும் 9cb02043-a377-482f-8e64-973e5956af5a_S_secvpfசூழ்நிலைக்கேற்ப சர்வதேச அளவில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து கார்பன்டை ஆக்சைடு வெளியாகிறது. எரிவாயு, நிலக்கரி, எண்ணை ஆகியவற்றில் இருந்தும் வெளியாகும் கார்பனின் அளவு அதிகரித்து வருவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதனால் அண்டார்டிகா கடலில் பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருக தொடங்கியுள்ளன.

படிப்படியாக அனைத்து பனிப்பாறைகளும் உருகும் பட்சத்தில் கடலின் நீர்மட்டம் மிக அதிகமாக உயர்ந்து விடும்.எனவே, நியூயார்க், லண்டன், டோக்கியோ, ஹாங்காங் ஷாங்காய், கொல்கத்தா, ஹம்பர்க், உள்ளிட்ட உலகின் பெரு நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பெரு நகரங்களில் வாழும் 100 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சூழல், நிலை உருவாகியுள்ளது. எனவே, வட அண்டார்டிகாவை பாதுகாக்க வேண்டியது அவசியம் என ஆய்வாளர் ஆண்டர்ஸ் லெவர்மான் தெரிவித்துள்ளார்.2020–ம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு பத்தாண்டுகளில் மட்டும் வட துருவத்தில் 0.25 டிகிரி வெப்ப நிலை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply