ஐ.நா. தலைமையகத்தில் பலஸ்தீன கொடியை பறக்கவிட அங்கீகாரம்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பலஸ்தீன கொடியை ஏற்றுவதற்கு பொதுச் சபையில் பெரும் எண்ணிக்கை யிலான நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. பலஸ்தீன நாட்டை உருவாக்கும் பிரசாரத் தில் இது முக்கியமான ராஜதந் திர வெற்றியென கருதப்படுகிறது. பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது கடந்த வியாழனன்று வாக் கெடுப்பு இடம்பெற்றது. இதில் நியூயோர்க் தலைமையத்தில் பலஸ்தீன கொடியை ஏற்ற 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உட்பட எட்டு நாடுகளே எதிராக வாக்களித்தன. மேலும் 45 நாடுகள் வாக்க ளிப்பை தவிர்த்துக் கொண்டன.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 45 நாடுகளில் 28 நாடுகள் வாக்களிப் பதை தவிர்த்துக் கொண்டதோடு பிரான்ஸ் உட்பட பாதிக்கும் அதிகமானவை பலஸ்தீனத்திற்கு ஆதரவளித்துள்ளன.
இந்த தீர்மானத்தில் ஐ.நாவின் மற்றொரு அங்கத்துவமற்ற கண்காணிப்பு நாடான வத்திக்கானின் கொடியையும் ஏற்ற அனுமதி கோரப்பட்டிருந்தது. 20 தினங்களுக்குள் பலஸ்தீன கொடி ஐ.நா. தலைமையத்தில் பறக்கவிட அந்த தீர்மானம் கோரியுள்ளது. இதன்படி வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி பலஸ்தீன கொடியை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply