சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேசிய பிரச்சினைத் தீர்வுக்கான உந்துசக்தி :அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
இலங்கைக்குள் உள்ளக விசாரணை நடத்துவதற்கே தமிழ் மக்கள் சம்பந்தனுக்கு ஆதரவு வழங்கினார்களே தவிர மக்களால் நிராகரிக்கப்பட்ட விக்கினேஸ்வரனின் சர்வதேச விசாரணைக்கல்ல என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியமை தேசிய பிரச்சினைத் தீர்வுக்கான உந்துசக்தியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
எமது ஆட்சியில் நாம் அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அடிபணியவில்லை. அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் பின்பற்றவில்லை.
எனவே தான் அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணைகளை முன்வைத்தது. ஆனால் இன்று அமெரிக்காவுக்கு அடிபணிந்து அதன் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கும் ஆட்சியே உள்ளது.
எனவே தான் அமெரிக்கா கடினப் போக்கை தளர்த்தியுள்ளது. அதேவேளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு உள்ளக விசாரணைக்கும் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். எனவே அவர்களது கோட்பாட்டுக்கமைய உள்ளக விசாரணையை ஆதரிக்கின்றனர். இதனை வரவேற்கின்றோம்.
ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட விக்கினேஸ்வரனும் அவரது கூட்டமும் சர்வதேச விசாரணையை கோருகின்றன. இதனை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் நிலைப்பாட்டையே ஆதரிக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply