மஹிந்தவுக்கு சாதாரண பாதுகாப்பு போதுமானது! அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!

viyakalaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததனால் எனது கணவர் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதனால் அவரது உயிர் பறிக்கப்பட்டது.தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து பெரும் சர்ச்சை கிளப்பப்படுகிறது. அவர் தற்போது சாதாரண எம்.பி. என்பதால் அவருக்கு சாதாரண பாதுகாப்பு போதுமானது என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மேலும் கூறியதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் தென்பகுதியில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. அவர் முன்னாள் ஜனாதிபதியானாலும் தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்கின்றார்.

சாதாரண எம்.பி. ஒருவருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வழங்கப்படுகின்றனர். ஆனாலும் எமது நல்லாட்சி அரசாங்கம் அவருக்கான சகல வரப்பிரசாதங்களையும் வழங்குகிறது.

இவற்றைப் பெற்றுக்கொண்டு அவர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார்.இவரது ஆட்சிக் காலத்தில் எம்.பி.க்களுக்கு அச்சுறுத்தல் நிலவிய போதிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்புக்கு வழங்கப்பட்டனர்.

எனது கணவர் மகேஸ்வரன் 2007 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவ்வாறு அவர் குரலெழுப்பினார். இதனால் அவருக்கு இருந்த 16 பேர் கொண்ட பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டது.

கடுமையாக தமது அரசாங்கத்தை விமர்சித்தார் என்பதனால்தான் அவரது உயிர் பறிக்கப்பட்டது. இவர்களது செயற்பாடுகள் இவ்வாறு அமைந்திருந்த போதிலும் எமது அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply