விண்வெளியில் இருந்து புற்றுநோய் பாதித்த சிறுமியிடம் பேசிய வீரர்: உடல்நல ஆலோசனை வழங்கினார்
சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி வீரர் டிம் பீக் தங்கி பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் லண்டனில் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் ஓடினார்கள். அதே நேரத்தில் விண்வெளியில் தங்கியிருக்கும் டிம் பீக் ‘டிரட்மில்’ எந்திரத்தில் 42 கி.மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்தார்.இந்நிலையில், ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் 30 நோயாளிகளிடம் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்தபடியே அவர் சிறப்பு வீடியோ கால் வசதியைப் பயன்படுத்தி பேசினார்.
அவர்களில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாடிசன் வெப் என்ற 5 வயது சிறுமியும் ஒருவர். அவள் லண்டனில் கிரேட் ஆர்மண்ட் தெரு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுகிறாள்.
புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் சிறுமி மாடிசனுக்கு டாக்டர்கள் சில உணவு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். அது குறித்து அறிந்த டிம் பீக் அவளுக்கு உடல்நலம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் சிறுமியின் குடும்பத்தினர் குறித்தும் விசாரித்தார். விண்வெளி ஆய்வகத்தில் தங்கியிருக்கும் தாம் அதிக உணவு சாப்பிடுவதாக ‘ஜோக்’ அடித்தார்.
மற்ற நோயாளிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். விண்வெளியில் தங்கியிருக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிகிறதா? வேற்று கிரகவாசிகளுடன் எப்போதாவது கால்பந்து விளையாடி இருக்கிறீர்களா? என்பன போன்ற ருசிகரமான கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply