பிரேசில் பாராளுமன்ற சபாநாயகர் இடைநீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

bresilபிரேசில் நாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் பதவி வகித்து வந்தவர் எட்வர்டோ குன்ஹா. இவர் அதிபர் தில்மா ரூசெப்பின் அரசியல் எதிரி. சமீபத்தில் தில்மா ரூசெப் பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். இந்த நிலையில், எட்வர்டோ குன்ஹா, சுவிட்சர்லாந்து நாட்டில் கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையை நடத்தவிடாமல் தடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது. 

 

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அரசு தலைமை வக்கீல் அணுகினார். அவர் சபாநாயகர் எட்வர்டோ குன்ஹா மீது குற்றச்சாட்டு சுமத்தி, அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து, சபாநாயகர் எட்வர்டோ குன்ஹாவை அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தற்காலிக சபாநாயகராக துணை சபாநாயகர் வால்திர் மாரன்வாஹ் பொறுப்பேற்றார்.

 

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்-முறையீடு செய்யப்போவதாக எட்வர்டோ குன்ஹா அறிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply