மேலும் ஒரு அணுகுண்டு பரிசோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது: அமெரிக்க உளவு நிறுவனம் எச்சரிக்கை

north kereaவடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

இதனால் அந்த நாட்டின் மீது பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட சில சர்வதேச தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா.

இதையடுத்து, வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம்தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை அடுத்தடுத்து பரிசோதித்தது.

எதிரி நாடுகளின் போர் விமானங்களை தாக்கி அழிக்கும் நவீனரக ராக்கெட்களை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கடந்த மாதம் 2-ம் தேதி வடகொரியா பரிசோதித்தது. மேலும், தென்கொரியா நாட்டு அதிபர் மாளிகையை ஏவுகணைகளின் மூலம் வடகொரியா தாக்கி அழிக்கும் சித்தரிப்பு வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.

இதற்கிடையே, தென்கொரியா ராணுவத்துடன் அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் நாட்டின்மீது தாக்குதல் நடத்தவே இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மறைந்த கிம் இல் சுங்-கின் பிறந்தநாள் கடந்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ஏவுகணை சோதனைகளுடன் தீபாவளிபோல் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

அவ்வகையில்,வடகொரியா பரிசோதித்த அந்த ஏவுகணை தோல்வியை சந்தித்ததாக தென்கொரியா உரிய ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை கூடம் அமைந்துள்ள புங்கியே-ரி பகுதியில் கடந்த சில நாட்களாக வாகன நடமாட்டம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் அப்பகுதியில் நடமாட்டம் அதிகரித்த சில நாட்களில் வடகொரியா அணு ஆயுத பரிசோதனைகளை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்காவின் சிந்தனை சுரங்கம் எனப்படும் ஜான் ஹாப்கின்ஸ் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த சர்வதேச நாடுகளை உளவறியும் பிரிவு எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் ஆளும்கட்சி மாநாடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் உலகுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மேலும் ஒரு அணுகுண்டு பரிசோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக இந்த உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த தகவலுக்கு ஆதாரமாக வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள வீடியோ காட்சிகளை ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின்படி, வடகொரியா அணுகுண்டு பரிசோதனை நடத்தினால், சர்வதேச தடையைமீறி அந்நாடு நடத்தும் ஐந்தாவது அணுகுண்டு பரிசோதனையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply