கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
ராமேசுவரம், தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பார்த்து இங்கு மீன்பிடிக்கக்கூடாது என்று கூறி எச்சரித்தனர். மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை வீசி எறிந்ததோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் சில மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர்கள், தங்கச்சிமடத்தை சிங்கம் லியோன் என்பவரின் படகில் இருந்த மகேஷ், கணேஷ், கேனோ உள்ளிட்ட 6 மீனவர்களையும், அந்த விசைப்படகுடன் சிறைபிடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் தாங்களும் சிறைபிடிக்கப்படுவோமோ என்று அஞ்சி அவசர, அவசரமாக பாதியிலேயே கரை திரும்பினர்.
இதுகுறித்து கரை திரும்பியவர்கள் கூறுகையில், நாங்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து எங்களை தரக்குறைவாக திட்டி மிரட்டினர். இதனால் நாங்கள் மீன்பிடிப்பதை விட்டுவிட்டு திரும்பும்போது 6 மீனவர்களை ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன. இதற்கு எப்போது தான் விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply