அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 200 சிலைகள் மோடியிடம் ஒப்படைப்பு

USA MODIசுமார் 2000 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி சிலைகள் திருடப்பட்டு அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. அந்த வகை யில் கடத்தலின்போது அமெரிக்க சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 200 கலைப் பொருட்களை அந்த நாடு நேற்று முன்தினம் திருப்பி அளித்தது.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இதில் சென்னை சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட துறவி மாணிக்கவாச கரின் சிலையும் அடங்கும். சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிலை 2000 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இதேபோல ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கல விநாயகர் சிலை உட்பட 200 கலைப் பொருட்கள் இந்தியாவிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.670 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடந்த சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் இந்தியில் பேசியதாவது: இந்தியா வுக்குச் சொந்தமான பொருட்களை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அதற்காக அதிபர் ஒபாமாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். இப்போது திருப்பி அளிக்கப் பட்ட கலைப்பொருட்கள் வெறும் சிலைகள் அல்ல. அவை இந்திய பாரம்பரியத்தோடு இணைந்தவை. இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அதனால்தான் இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்பனா சாவ்லாவுக்கு அஞ்சலி

மறைந்த இந்திய-வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில், “தியாகத்துக்கு கவுரவம், துணிச்சலுக்கு வீர வணக்கம். இரங்கலுடன் அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது. தலைமைத் துவம், அளவிடமுடியாத துணிச் சலுக்கு அஞ்சலி” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா நினைவிடத்தில், கல்பனா சாவ்லா வின் கணவர், அவரது குடும்பத் தினர், நாசா மூத்த அதிகாரிகள், இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அவரின் தந்தை ஆகியோருடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் அஷ்டன் கார்ட்டர், மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே சிங், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா, தெற்கு, மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி எங்களைச் சந்தித்ததன் மூலம், விண்வெளித் துறையில் இந்தியாவுடனான எங்களின் வலுவான ஒத்துழைப்பை அவர் அங்கீகரித்திருப்பது எங்களின் கவுரவம். தனிப்பட்ட முறையில் எனது கல்பனா சாவ்லாவின் நினைவு கூரல்” என சுனிதா வில்லியம்ஸ் தெரிவிததார்.

கடந்த 2003-ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply