தென் சீனக்கடலில் சீனா – ரஷியா கூட்டு போர் பயிற்சி

China சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த வழக்கில், ஐ.நா. சட்ட திட்டத்தின்படி செயல்படும் சர்வதேச தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த தீர்ப்பை சீனா நிராகரித்து விட்டது.

 

இந்த நிலையில் ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு தரப்பு ராணுவ உறவுகளை வளர்த்துக்கொள்ளும் விதத்திலும், கடல் சார் அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிக்கும் விதத்திலும் இந்த பயிற்சியை நடத்தப்போவதாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் யாங் யுஜூன், பீஜிங்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

அதே நேரத்தில் இது மூன்றாம் நபர்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.

 

கடந்த காலத்திலும் சீனாவும், ரஷியாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply