இரகசியங்களை ஜனாதிபதி வெளியிட வேண்டும்
தங்கக் குதிரை, லம்போகினி, ஹெலிகொப்டர் 18 பில்லியன் டொலர் வங்கிக் கணக்கு போன்ற பல ரகசியங்களை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்திருந்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார். புதிய கட்சி அமைத்தால் ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். தான் சொல்வது போன்று நடந்து கொண்டால் ரகசியங்களை பாதுகாப்பதாகவே அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாராவது தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் புதிய கட்சி அமைப்பது, திருட்டு செய்தவர்களை பிடிப்பது என்பன தொடர்பில்லாத இரு படங்களாகும். மாத்தறையில் நடந்த முதலாம் வருட நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துகொள்ளவில்லை. அதனால் ஜனாதிபதி கோபமாக பேசினார். மேடையில் சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட இருக்கவில்லை.
புதிய கூட்டணியை ஆரம்பம் முதல் எதிர்த்த எனக்கும் அழைப்பு கிடைத்தது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply