பெல்ஜியத்தில் ஓடும் பஸ்சில் 3 பேரை கத்தியால் குத்திய பெண்
பெல்ஜியத்தில் ஓடும் பஸ்சில் 3 பேரை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் சுட்டுக் வீழ்த்தினர்.பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்சில் ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஒரு பெண் எழுந்தாள்.வெறிபிடித்தவள் போன்று கத்திக்கொண்டே பஸ்சில் இருந்த பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தினாள் அதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
இதனால் ஓடும் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கத்திக்குத்து நடத்திய பெண்ணை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதனால் அவள் படுகாயம் அடைந்தாள். உடனே அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவள் கத்தியால் குத்துவதற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. தீவிரவாத தாக்குதல் எதுவும் இல்லை. இவளுக்கு மனநிலை பாதித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பாரீசிலும், மார்ச் மாதம் பிரசல்ஸ் நகரிலும் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த மாதம் நைஸ் நகரில் லாரி ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். இது போன்ற தாக்குதல் காரணமாக இவள் ஐ.எஸ். தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேக கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply