8 வயது சிறுமியை கடித்து கொன்ற தெருநாய் கூட்டம்
ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் உள்ளது திக்வார் கிராமம். இந்த ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி சோனிகுமாரி. அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.சோனிகுமாரி வீட்டில் கழிவறை இல்லை. அந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் அருகில் உள்ள சாக்கடை பகுதிக்கு சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது வழக்கம்.
அது போல் சோனிகுமாரியும் சாக்கடை பகுதிக்கு தனியாக சென்றாள். அப்போது அங்கிருந்த தெருநாய் கூட்டம் அவளை சுற்றி வளைத்து கடித்தது. இதனால் சோனிகுமாரி அலறினாள்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டினார்கள். நாய்கள் கடித்ததால் சோனிகுமாரி உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சோனிகுமாரி இறந்து விட்டாள்.
வீட்டில் கழிவறை இல்லாததால் தான் இந்த சம்பவம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த வீட்டில் கழிவறை அமைத்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் 30 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இங்குள்ள துருவா என்ற இடத்தில் 5 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்றன. கடந்த ஆண்டு ராஞ்சியில் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை ஒன்றை தெருநாய்கள் வெளியே இழுத்து சென்று கடித்து தின்றன.
இது போல் ஜார்கண்ட் மாநிலத்தில் தெருநாய்களால் பொது மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 65 வயது பெண் ஒருவரை தெரு நாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply