அடுத்த வாரம் இந்தியா செல்லும் ரணில்

RANILபிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இம்முறை பிரதமராக பதவியேற்ற ரணில், தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக, கடந்த மார்ச் மாதம் இந்தியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, கடந்த மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவர் மீளவும் அடுத்த ஆண்டு மே மாதம் நாட்டுக்கு வரவுள்ளார்.

இதனை முன்னிட்டு, ஒக்டோபர் மாதம் 4,5 மற்றும் 6ம் திகதிகளில், ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு சென்று, நரேந்திர மோடியை இலங்கை வருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும், இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கவும் ரணில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply