பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணுகுண்டுகளை கைப்பற்ற தீவிரவாதிகள் திட்டம்: ஹிலாரி கிளிண்டன் அச்சம்

cilintonபாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் அச்சம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் (குடியரசு கட்சி), ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி) ஆகியோரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் ஆசிய கண்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

டொனால்டு டிரம்ப் பேசும் போது, “பாகிஸ்தானில் நீண்ட நாட்களாக ஸ்திரதன்மை இல்லை. அதனால் அங்கு அணு ஆயுத கிடங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.

விர்ஜீனியாவில் கட்சி நிதியளிப்பு கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசினார். அப்போது அவர் 50 நிமிடம் ஆற்றிய உரையின் வீடியோ ஜனநாயக கட்சியின் கம்ப்யூட்டரில் இருந்து திருடப்பட்டு வெளியிடப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஹிலாரி, இந்தியா மீதான பகைமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாகிஸ்தான் அணு ஆயுதத்தை அதிக அளவில் தயாரித்துள்ளது.

மேலும், அமெரிக்கா வழங்கிய அதி நவீன அணு ஆயுத ஏவுகணைகளும் அங்கு உள்ளன. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் அது ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பாகிஸ்தானில் புரட்சி மூலம் தீவிரவாதிகள் அரசை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். பின்னர் அணு குண்டுகளை கைப்பற்றி அதன் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply