இந்தியாவில் இருந்து ‘நடனமாடும் பெண்’ சிலையை மீட்டு வர வழக்கு பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல் தாக்கல்

pksபாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டில் ஜாவத் இக்பால் ஜாப்ரே என்ற வக்கீல் ஒரு ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்துள்ளார். மொகஞ்சதாரோவில் இருந்து 1926–ம் ஆண்டு நடனமாடும் பெண் என்ற வெண்கல சிலை தோண்டி எடுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய ஆர்ட்ஸ் கவுன்சில் வேண்டுகோளுக்கு இணங்க அந்த சிலை, 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த சிலை லாகூர் அருங்காட்சியகத்தின் சொத்து.

 

அது ஐரோப்பாவில் லியானார்டோ டாவின்சியின் மோனலிசா ஓவியம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அது பாகிஸ்தான் கலாசாரத்தின் அடையாள சின்னமும் ஆகும். அந்த சிலையை மீட்டு வந்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

 

இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

 

நடனமாடும் பெண் சிலை, உருவத்தில் மிகவும் சிறியது. அதன் உயரம் 10.5 செ.மீ.தான். இது 5 ஆயிரம் ஆண்டு பழமையானது.

 

இந்த சிலையை இந்தியாவிடம் இருந்து மீட்டு வருவது குறித்து யுனெஸ்கோவிடம் முறையிட பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் தேசிய கலை அருங்காட்சியக தலைமை இயக்குனர் ஜமால் ஷா சமீபத்தில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply