பெர்லின் தாக்குதல் எதிரொலி: உலகெங்கும் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பெர்லின் நகர தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை இரவில், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரியை ஓட்டிச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், பெர்லின் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக மக்கள் அமைதி காக்குமாறும், அச்சப்பட வேண்டாமென்றும் பெர்லின் நகர மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெர்மன் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பெர்லின் நகர மேயரான மிக்கேல் முல்லர், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply