இன்று விமானப் படையின் 66 ஆவது ஆண்டு நிறை­வு­ விழா

இலங்கை விமா­னப்­ப­டையின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று வியா­ழக்­கி­ழமை கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. விமா­னப்­படைத்தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­ப­தியின் வழி­காட்டல் மற்றும் கண்­கா­ணிப்பின் கீழ் இந்த நட­வ­டிக்­கைகள் யாவும் இடம்­பெ­று­வ­தாக இலங்கை விமா­னப்­படைத்தலை­மை­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கைக்குள் 1951 மார்ச் மாதம் 2ஆம் திகதி ரோயல் லங்கா விமா­னப்­படை நிறு­வப்­பட்­ட­துடன் விமா­னப்­படை ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் 1972 மார்ச் மாதம் 2ஆம் திகதி ரோயல் லங்கா விமா­னப்­படை, தாய் நாட்டை பாது­காப்­ப­தற்­காக இலங்கை விமா­னப்­ப­டை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டையில் இலங்கை விமா­னப்­ப­டையின் 66ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நாளை 3ஆம் திகதி முதல் 5ஆம் திக­தி­வரை இரத்­ம­லானை விமா­னப்­ப­டையின் ஆரம்ப முகாமில் விமா­னப்­ப­டையின் கண்­காட்­சிகள் மற்றும் களி­யாட்ட நிகழ்­வுகள் ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த களி­யாட்ட நிகழ்வில் விமா­னப்­ப­டையின் இய­லுமை மற்றும் திற­மைகள் தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் பிர­யோ­சனம் அளிக்கும் வகையில் காட்­சிப்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதே­போன்று விமா­னப்­படை இயற்கை அனர்த்­தங்கள் மற்றும் அவ­சர நிலை­மை­க­ளின் ­போது பொது மக்­க­ளுக்­காக செயற்­பட்ட விதம் மற்றும் அந்த சேவை­களை சர்­வ­தேச மட்­டத்தில் செயற்­ப­டுத்­திய விதத்தை பட்­ட­வர்த்­த­ன­மாக காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இந்த கண்­காட்சி மற்றும் களி­யாட்ட நிக­ழ்­வின்­ போது விமான சாக­சங்கள், பரசூட் கண்­காட்சி மற்றும் விமா­னப்­படை நாய்களின் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் இந்த கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் மாலை 2.30 மணி முதல் இரவு 11 மணிவரை இடம்பெறவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply