ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்: பிரதமர் ஏஞ்சலா அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்குகிறபோது, தனது பெரும்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கருதினார். இதற்காக பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தினார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. இருந்த பெரும்பான்மையையும் அவர் இழந்தார். தற்போது அங்கு தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ளது. எனவே ‘பிரிக்ஜிட்’ என்று அழைக்கப்படுகிற ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிற நடவடிக்கையை இங்கிலாந்து தொடங்குவதில் சிக்கல் நேரக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் மெக்சிகோ சென்றுள்ளார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவுடன் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிற முடிவில் இங்கிலாந்து விடாப்பிடியாக இருக்கும் என்று கருதுகிறேன். இங்கிலாந்து பிரதமர் இது தொடர்பான பேச்சு வார்த்தையை தொடங்கும் திட்டத்தில் இருப்பார். நாங்களும் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட காலஅட்டவணைப்படி பேச்சு நடந்து முடிய வேண்டும். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி பேச்சு வார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று கருதவில்லை” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினாலும், இங்கிலாந்து, ஐரோப்பாவின் ஒரு அங்கம்தான். அந்த நாடு நல்லதொரு கூட்டாளியாக தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply