காணாமல் போனோர் பணியக சட்டத்தை பிரித்தானியா வரவேற்பு!

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் காணாமல் போனோருக்கான பணியக சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவது எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தீர்வு ஒன்றை கண்டறிவதற்கு உதவியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply