எண்ணெய் லாரி தீப்பிடித்து பயங்கர விபத்து: பாகிஸ்தானில் 123 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நெடுஞ்சாலையில் எண்ணெய் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்துக்குள்ளானதில் 123 பேர் பலியாகி, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.வேகமாகச் சென்றதால் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளாகி, அதன் சேதமடைந்த கொள்கலன்களிலிருந்து எரிபொருள் கசிந்துள்ளது, இதனால் பயங்கரமாகத் தீப்பிடித்து எரிந்தது.

சேதமடைந்த அதன் கொள்கலன்களிலிருந்து எரிபொருள் கசிந்ததால் தீப்பிடித்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் 123 பேர் பலியானதாகவும், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயடமடைந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் கசிந்தவுடன் அதிலிருந்து எண்ணெய் சேகரிப்பதற்காக மக்கள் விபத்துக்குள்ளான லாரிக்கு அருகில் வந்துள்ளனர். தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 6 கார்கள் 12 மோட்டார்சைக்கிள்கள் தீக்கிரையாகின. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கும் பஹாவல் விக்டோரியா மருத்துவமனைக்கும் தூக்கிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ மனைகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சமூகவலைத்தளங்களில் மக்கள் தங்கள் ஆழ்ந்த வருத்தங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர், அதாவது பயங்கரவாதம் விபத்து மற்றும் அலட்சியத்தினால் ஏகப்பட்ட உயிர்கள் அழிந்துவருவதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply