அமெரிக்கா விரைந்தார் மோதி; நாளை டிரம்புடன் சந்திப்பு

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவுக்கு விரைந்துள்ளார்.முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் உள்பட அமெரிக்காவின் தொழில் துறை தலைவர்களையும், பின்னர் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய சந்திப்பு திங்கட்கிழமை நடைபெறுகிறது. அப்போதுதான் அதிபர் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோதி சுமார் ஐந்து மணி நேரங்களை கழிக்க உள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்றவுடன், இரவு விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டு தலைவர் மோதி ஆவார்.

பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்த விஷயங்கள் விருந்தின்போது நடைபெறும் விவாவத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply