போரைத் தவிர்க்கும்படி தென் கொரிய அதிபர் கோரிக்கை

தன்னை சந்திக்க வந்த அமெரிக்க ராணுவ அதிகாரியான ஜோசஃப் டன்ஃபோர்ட்டிடம் போரைத் தவிர்க்க ராஜதந்திர ரீதியிலான தீர்வை காணும்படி கேட்டுக்கொண்டார். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து இக்கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிகாரி ராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முன்னுரிமை தரப்படுகிறது என்றார். இந்த நிலையில் வட கொரியா சண்டை என்று வந்தால் அது அணு ஆயுதப் போராக மட்டுமே முடிவடையும் என்றுள்ளது.

 

தென் கொரிய அதிபர் மூன் எங்களது நலன் அமைதி நிலவுவதிலேயே அடங்கியுள்ளது. அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையை அமைதியான, பொறுப்பான முறையில் கையாளும் என்றே நம்புவதாகவும் தெரிவித்தார். வட கொரியா மேலும் நிலைமையை மோசமடையச் செய்யும் பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

எனினும் அமெரிக்க அதிகாரி டன்ஃபோர்ட் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது, தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பதை உறுதி செய்வதுமே எங்கள் வேலை. என்றாலும் அமைதியான முறையில் பிரச்சினையை தீர்க்கவே விரும்புவதாகவும், தலைமைக்கு இரண்டாம் வாய்ப்பைக் கொடுப்பதே எங்கள் பணி என்றும் கூறினார். இதற்கு முன் அமெரிக்கா தூதரக மற்றும் பொருளாதார அழுத்தம் பலன் தராவிட்டால் ராணுவ நடவடிக்கையே அடுத்த வாய்ப்பு என்று கூறியுள்ளது.

 

வட கொரியாவுடன் போர் ஏற்படும் சூழல் இல்லை என்றே மூத்த அமெரிக்க அதிகாரிகளும் கூறி வருகின்றனர்.

 

இதனிடையே சீனா, உக்ரைன் ஆகிய நாடுகள் வட கொரியாவுடனான தங்கள் வர்த்தகத்தில் கெடுபிடி காட்டத் துவங்கியுள்ளன.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply